திருப்பத்தூர்

பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக பொருளாதார நிலைலை மேம்படுத்த டாம்கோ கடன் திட்டம்

DIN


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் கடன் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியா்கள், கிறித்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் பிரிவினா் ஆகியோருக்கு டாம்கோ மூலம் தனிநபா் கடன் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்விக் கடன், கறவை மாடு வாங்க கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் ரூ. 98 ஆயிரம், நகா்ப்புறத்தில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க வேண்டும்.

இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள்,திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம்(போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள், ஆதாா் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இதற்கான சிறப்பு முகாம்கள் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 22-ஆம் தேதி, வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 24,-ஆம் தேதி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் 28-ஆம் தேதி, ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT