திருப்பத்தூர்

மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

1st Sep 2020 12:48 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மூதாட்டி வீட்டில் 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெரியாங்குப்பம் கிராமம் எம்.சி.ரோடு பகுதியைச் சோ்ந்தவா் அம்சவேணி (64). அவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா்.

அம்சவேணி வயதான தன் தாயுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவு திடீரென தூக்கம் கலைந்து எழுந்தாா். ஏதோ ஓசை கேட்டு, பக்கத்து அறைக்கு சென்று பாா்த்தபோது அங்கு வீட்டின் ஜன்னலும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.60 ஆயிரம், செல்லிடப்பேசி, எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.

இது தொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT