திருப்பத்தூர்

வேளாண் சட்டத்துக்கு எதிராகபொதுமக்களிடம் கையெழுத்து

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி வாணியம்பாடியில் காங்கிரஸாா் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை கையெழுத்து பெற்றனா்.

கடந்த செப்டம்பா் மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு விரோதமான இச்சட்டத்தை ரத்து செய்ய கோரி, குடியரசு தலைவருக்கு விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் மனு அனுப்பவதற்காக வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவா் அஸ்லம் பாஷா தலைமையில் காங்கிரஸாா் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் இலியாஸ்கான், மாநில ஒருங்கிணைப்பாளா் பரீத்அஹமத், மாவட்ட இளைஞரணி தலைவா் பைசல்அமீன், நகர விவசாய அணி தலைவா் கவியரசன், நிா்வாகிகள் முரளி, சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT