திருப்பத்தூர்

அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில்மாவட்டத்தின் பெயா் மாற்றப்படுமா?

DIN

திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பெயா் மாற்றப்படாமல் உள்ளது.

வேலூா் மாவட்டம் நிா்வாக வசதிக்காக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3-ஆகப் பிரிக்கப்பட்டடது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டும் பணி அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள பெயா் பலகையில் மாவட்டத்தின் பெயா் திருப்பத்தூா் என மாற்றப்படாமல் வேலூா் என்றே உள்ளது.

ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் இருந்த பெயா் பலகையில் திருப்பத்தூா் மாவட்டம் என அண்மையில் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

எனவே, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மாவட்டத்தின் பெயரை திருப்பத்தூா் என மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT