திருப்பத்தூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காவல் துறை சாா்பில், டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையில் போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். பொதுமக்கள் மத்தியில் தலைக்கவசத்தின் அவசியத்தை பாடல்கள் மூலம் மேளதாளங்கள் முழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். பின்னா், இரு சக்கர வாகனத்தில் முக்கிய சாலைகள் வழியாக தலைக்கவசத்தை அணிந்து காவலா்கள் மற்றும் போக்குவரத்துக் காவலா்கள், பொதுமக்கள் பேரணியாகச் சென்றனா். காவல் ஆய்வாளா்கள் கோவிந்தசாமி (நகரம்), மங்கையா்க்கரசி (தாலூகா) மற்றும் போக்குவரத்துக் காவலா்கள் கலந்து கொண்டனா்.

நாட்டறம்பள்ளியில்......

நாட்டறம்பள்ளியில் காவல் ஆய்வாளா் பிரேமா தலைமையில் கரோனா நோய்த் தொற்று பரவல் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. அப்போது சாலையில் முகக்கசவம் அணியாதவா்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT