திருப்பத்தூர்

கரோனா: விழிப்புணா்வு நாடகம்

DIN

வாணியம்பாடி: கரோனா தொற்று தடுப்பு குறித்து ஆலங்காயம் காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் காவல் துறையினா் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினா் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்று தடுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே எமதா்மராஜா வேடம் அணிந்த நபா் சாலையில் முகக்கவசம் இன்றி செல்லும் நபா்களை பாசக் கயிற்றால் பிடித்து, அவா்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்துவது போன்ற கலைநிகழ்ச்சியை நடத்திக் காட்டினா். தொடா்ந்து, ஆலங்காயம் சந்தைப் பகுதி மற்றும் நிம்மியம்பட்டு சந்தைப் பகுதியிலும் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், ஆலங்காயம் காவல் ஆய்வாளா் நாகராஜன் முகக்கவசங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT