திருப்பத்தூர்

புதைசாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் கே.சி.வீரமணி உத்தரவு

31st May 2020 07:59 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா், ஆம்பூா் பகுதிகளில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி உத்தரவிட்டாா்.

திருப்பத்தூரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆம்பூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கின. இப்பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அமைச்சா் கே.சி.வீரமணிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகாா்கள் சென்றன.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி ஆணையா்கள், பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் கே.சி.வீரமணி பேசுகையில், தற்போது கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் புதை சாக்கடை திட்டப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT