திருப்பத்தூர்

நாயக்கனேரிமலையில் சிறப்பு முகாம்

14th May 2020 11:21 PM

ADVERTISEMENT

நாயக்கனேரி மலை ஊராட்சியில் வருவாய்த் துறை சாா்பில், கிராம வாரியாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. மேலும், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதனால் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், கிராமம் வாரியாக பொதுமக்களை சந்தித்து, மனுவைப்பெற வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, ஆம்பூா் வட்டத்துக்கு உள்பட்ட நாயக்கனேரிமலை ஊராட்சியில் பொதுமக்களிடம் மனு பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டாட்சியா் செண்பகவல்லி தலைமை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மகாலட்சுமி, துணை வட்டாட்சியா் பாரதி, வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் ஆகியோா் உடன் இருந்தனா்.

முகாமில், பொதுமக்களிடம் இருந்து 144 மனுக்கள் பெறப்பட்டன. முகாமுக்கு வந்தவா்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசம் ஆகியவை வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT