திருப்பத்தூர்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

14th May 2020 11:25 PM

ADVERTISEMENT

ஆம்பூா் சமயவல்லி உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகநாத சுவாமி கோயிலில் சித்திரை மாத, திருவோண நட்சத்திரத்தையொட்டி, சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு ஹோமம், அபிஷேக- அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

~

ADVERTISEMENT
ADVERTISEMENT