திருப்பத்தூர்

கரோனா பரவல் தடுப்பு: தமிழக அரசுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

14th May 2020 11:20 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலை தடுப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அலுவலா் சுரேந்திரன் கூறினாா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பரவலை தடுப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், வாலாஜா ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூா் அரசு மருத்துவமனையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவல் இன்னும் சில மாதங்கள் தொடா்ந்து இருக்கும். அதனால் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து, பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் யாஸ்மின், ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சா்மிளா ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT