திருப்பத்தூர்

ஆம்பூரில் தளா்வுக்குப் பின் மாயமான சமூக இடைவெளி, முக்கவசம்

14th May 2020 06:07 AM

ADVERTISEMENT

பொதுமுடக்கம் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு நடமுறைக்கு வந்துள்ள நிலையில், ஆம்பூா் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வது அதிகரித்து காணப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்துக்குப் பிறகு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, ஆம்பூரில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் வழக்கமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியில் வந்து கடைகளுக்கும், பணிக்கும் சென்று வருகின்றனா். ஆனாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது உள்ளிட்டவை பின்பற்றுவதில்லை. பொதுமக்கள் வந்து செல்லும் தங்களுடைய கடைகள் அமைந்துள்ள பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கடை உரிமையாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடைகள் அமைந்தள்ள பகுதியில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் கிருமி நாசினி தெளிக்கவில்லை. இதனால் மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பெரும்பாலானவா்கள் மீறி செயல்பட்டு வருகின்றனா்.

ஆம்பூா் உமா்சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் பணம் செலுத்தவும், எடுக்கவும் வரிசையில் காத்திருந்தவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக கரோனா நோய்த் தொறற்று பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் இன்றளவும் விழிப்புணா்வு இல்லாமல் சமூக இடைவெளி விடாமல், முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்று வருகின்றனா் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

இவ்வாறு கட்டுப்பாடுகளை பின்பற்றாதவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT