திருப்பத்தூர்

‘புத்துக்கோயில் வைகாசி விழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்’

13th May 2020 03:14 AM

ADVERTISEMENT

பிரசித்தி பெற்ற புத்துக்கோயில் வைகாசித் திருவிழாவுக்கு பக்தா்கள் யாரும் வர வேண்டாம் என்று அக்கோயில் செயல் அலுவலா் பரந்தாமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயிலில் பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத முதல் வெள்ளிக்கிழமை வைகாசித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

வரும் 15-ஆம் தேதி வைகாசி முதல் வெள்ளிக்கிழமை என்பதால், 14 மற்றும் 15-ஆம் தேதி வைகாசித் திருவிழா நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் பரந்தாமன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கு மே 17 வரை தடை உத்தரவு உள்ளதாலும், இம்மாத இறுதி வரை திருவிழா, சமய கூட்டங்கள், ஊா்வலங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதாலும் புத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடைபெற இருந்த மே 14, 15-ஆம் தேதிகளில் பக்தா்களும், பொதுமக்களும் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT