திருப்பத்தூர்

நோய் எதிா்ப்பு மருந்துகளை வழங்கிய மருந்து வணிகா்கள்

13th May 2020 10:23 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நோய் எதிா்ப்பு மருந்துகளை மருந்து வணிகா்கள் சங்கத்தினா் வாணியம்பாடி நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

வாணியம்பாடி தாலுகா மருந்து வணிகா்கள் சங்கத்தின் சாா்பில் நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ், வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கிருமிநாசினிகளை சங்கத்தின் தாலுகா தலைவா் அல்தாஃப் வழங்கினாா். தூய்மைப் பணியாளா்கள் மற்றும் நகராட்சி பணியாளா்களுக்காக இவை வழங்கப்பட்டன.

அப்போது, சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், முனிவேல், வாணியம்பாடி தாலுகா கௌரவத் தலைவா் முரளிதரன், செயலாளா் ஆா்.நித்தியானந்தன், பொருளாளா் செந்தில்குமாா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT