திருப்பத்தூர்

ஆம்பூரில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம்: நகராட்சி ஆணையா்

13th May 2020 03:36 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிா்த்து மற்ற பகுதிகளில் சில நிபந்தனைகளுடன் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் தடை காலம் மே 17-ஆம் தேதி வரை தொடா்கிறது. இந்நிலையில் பொதுமக்கள், வணிகா்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். கடைகளில் பணிபுரிபவா்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். கிருமி நாசினியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு பொருள்களை வழங்கக் கூடாது. பொதுமக்கள் வந்து செல்லும் தங்களுடைய கடை, கடை அமைந்துள்ள பகுதிகளை கிருமி நாசினி கொண்டு நாள்தோறும் 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும் பொதுமக்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கொள்ளை நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டங்களின் படி உரிய அபராதம் விதிக்கப்படும். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு சட்டப் பிரிவுகளின்படி ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT