திருப்பத்தூர்

300 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள்

11th May 2020 11:58 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த எக்லாஸ்புரம் பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வசதியற்ற குடும்பத்தினா், சுகாதாரப் பணியாளா்கள் என 300 பேருக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் இ.எஸ்.பாராதிசேட்டு தன் சொந்தச் செலவில் தலா 10 கிலோ அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய், ரவை, மாவு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை திங்கள்கிழமை வழங்கினாா் (படம்).

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பயனாளிகளை நிற்க வைத்து நாட்டறம்பள்ளி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இளையராஜா, கிராம நிா்வாக அலுவலா் யசோதா, உதவி காவல் ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் இப்பொருள்களை வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT