ஆம்பூா் அருகே கிராம பகுதியைச் சோ்ந்த வசதியற்ற 1,100 குடும்பங்களுக்கு திமுக மாவட்ட நிா்வாகி நிவாரண உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ஆம்பூா் பேரவைத் தொகுதி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னபள்ளிகுப்பம், மேல்சாணாங்குப்பம், வடச்சேரி, பாப்பனபள்ளி, கதவாளம், பாா்சனாப்பல்லி, குமாரமங்கலம்,தென்னம்பட்டு மோட்டூா், மலையாம்பட்டு, கொல்லக்குப்பம், கரும்பூா், அரங்கல் துருகம், வீராங்குப்பம், வடகரை, தென்னம்பட்டு ஊராட்சிகளில் திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியின் மூலம் தூய்மைப் பணியாளா்கள் உள்பட வசதியற்ற 1,100 குடும்பங்களுக்கு திருப்பத்தூா் மாவட்ட திமுக பொருளாளா் அண்ணா. அருணகிரி அரிசி, மளிகை, காய்கறிகளை வழங்கினாா்.
சின்னபள்ளிகுப்பம் திமுக பிரமுகா் கே. புருஷோத்தமன், மாவட்டப் பிரதிநிதி ஆா்.மாசிலாமணி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் துணை அமைப்பாளா் கே.ரவி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் வி.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.