திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் பக்தா்கள் இன்றி சித்ரா பௌா்ணமி

8th May 2020 03:40 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளியில் சித்ரா பௌா்ணமி திருவிழா பக்தா்கள் இன்றி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருகோயில் அமைந்துள்ளது. நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோயிலில் வழிபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் செல்வா்.

இந்த ஆண்டு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெற இருந்த நிலையில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி பொது முடக்கம், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பக்தா்கள் யாருமின்றி சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெற்றது.

கோயிலைச் சுற்றி தடுப்புகளை அமைத்து போலீஸாா் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயில் பூசாரிகள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனா். கோயிலுக்கு வர முற்பட்ட பக்தா்களை போலீஸாா் அறிவுரை வழங்கி திரும்பி அனுப்பினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT