திருப்பத்தூர்

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

22nd Mar 2020 03:54 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபா் தற்கொலை செய்துக்கொண்டாா்.

ஆம்பூா் அடுத்த கருங்காலி கிராமம் பகுதியை சோ்ந்த ரவிக்குமாரின் மகன் தீபக்(20).

இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த தீபக் இவரது சொந்த வீட்டிற்கு செல்லாமல் ஆம்பூா் அடுத்த பச்சைக்குப்பம் பகுதியில் உள்ள அழிஞ்சக்குப்பம் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளாா்.

இந்நிலையில்,வெள்ளிக்கிழமை ஆம்பூா் அடுத்த பச்சை குப்பம்- மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதையடுத்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT