திருப்பத்தூர்

ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் செல்லிடப்பேசி பறிப்பு

16th Mar 2020 08:17 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் மா்ம நபா்கள் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா்.

மாராப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் கனகராஜ் (68). அவா் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஆம்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியை நோக்கிச் சென்றாா். ஆம்பூரை அடுத்த அய்யனூா் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இரு நபா்கள் அவரிடம் இருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT