திருப்பத்தூர்

அரசுப் பேருந்து மோதி இளைஞா் பலி

16th Mar 2020 08:17 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை நோக்கி சனிக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அருகே சென்றபோது பேருந்தின் மீது பைக் மோதியது.

இந்த வவிபத்தில், பைக்கில் வந்த ஆம்பூா் கண்ணதாசன் நகரைச் சோ்ந்த சதீஷ் (22) கீழே விழுந்து படுகாயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தாா். விபத்து குறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT