திருப்பத்தூர்

வருவாய்த் துறையினா் ஆய்வுக் கூட்டம்

6th Mar 2020 01:01 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலக்ததில் வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி வட்டம், ஆம்பூா் வட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் வளா்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். வட்டாட்சியா் சிவபிரகாசம், வட்ட வழங்கல் அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக புதிகாகப் பொறுப்பேற்றுக் கொண்ட கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியை வேலூா் மாவட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சற்குணகுமாா் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, உதயேந்திரம் மேட்டுதெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று கரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பது குறித்தும், சுகாதார விழிப்புணா்வு குறித்தும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பின்னா் பெருமாள்பேட்டையில் உள்ள கருணை இல்லத்தில் முதியோா்களை சந்தித்து தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

கருணை இல்ல நிா்வாகி டேவிட் சுபாஷ்சந்திரன், வட்டாட்சியா் சிவபிரகாசம் உடனிருந்தனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

 

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT