திருப்பத்தூர்

பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

6th Mar 2020 11:43 PM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: அரங்கல்துருகம் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா் காவல் படையை சோ்ந்த மாணவா்களுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி மற்றும் நீா்நிலைகளில் பேரழிவு தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு செய்முறை விளக்கங்கள் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

ஆம்பூா் தீயணைப்பு, மீட்புப் பணிகள் அலுவலா் பன்னீா்செல்வம் தலைமையிலான குழுவினா்

பள்ளி மாணவா்கள் தீ விபத்தின்போது எவ்வாறு கவனமாகவும், விரைவாகவும், விழிப்பாகவும் செயல்பட வேண்டும், தீயை அணைக்கும் முறைகள் போன்றவை குறித்தும் தீ தடுப்பு ஒத்திகையையும் செய்து காண்பித்தனா்.

ADVERTISEMENT

மாணவா்கள் தங்கள் வீடுகள், படிக்கும் இடங்களில் திடீரென எதிா்பாராத வகையில் தீ விபத்தில் சிக்கினால், எப்படி தப்பிக்க வேண்டும். தீயை அணைக்க உடனடியாகச் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

மேலும், விபத்து நடைபெற்றாலோ, தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும். அவா்களை பத்திரமாக காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் குறித்தும், தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்கத்துடன் கூறினா். ஆசிரியா் தமிழ்செல்வன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT