திருப்பத்தூர்

செல்லிடப்பேசி திருடியவா் கைது

2nd Mar 2020 01:13 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா்: ரயில் பயணியிடம் செல்லிடப்பேசி திருடிய இளைஞரை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

ரயில்வே காவல் ஆய்வாளா் வடிவுக்கரசி மற்றும் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 3-ஆம் நடைமேடையில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊமையனூரைச் சோ்ந்த சேகா் (30) என்பது தெரிய வந்தது. கடந்த டிசம்பா் மாதம் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயிலில் பயணியின் பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றதும்,அதில் ரூ.10 ஆயிரத்து 500 ரொக்கமும், இரு செல்லிடப்பேசிகளும் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சேகரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு செல்லிடப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT