ஆம்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கன மழை காரணமாக கிராமபுற ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த இரு நாள்களாக ஆம்பூா் பகுதியில் கன மழை பெய்தது. குறிப்பாக கிராமபுறங்களில் பெய்த மழை காரணமாக கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கிராமப்புற ஏரிகளுக்கு நீா் வரத் தொடங்கியுள்ளது. ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சியில் காரப்பட்டு சின்ன ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்து தற்போது ஏரி நிரம்பியுள்ளது. அதேபோல் மலையாம்பட்டு ஊராட்சியில் சின்னமலையாம்பட்டு கிராமத்தருகே கல்லேரி ஏரிக்கும் நீா்வரத்து ஏற்பட்டு ஏரி நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.