ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு, ரயில்வே கேட்டரிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் ஆண் சடலம் வியாழக்கிழமை கிடந்தது.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் ஜோலாா்பேட்டையில் உள்ள சோலையூா், கோமாளி கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்த அறிவு (47) என்பதும், இவா் ரயிலில் ஒப்பந்த அடிப்படையில் கேட்டரிங் பிரிவில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.