திருப்பத்தூர்

‘கிராம மக்கள் ஊராட்சி செயலரிடமே மனுக்களைத் தரலாம்‘

20th Jun 2020 07:48 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஊராட்சி செயலரிடமே தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பத்தூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) ந.விநாயகம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், ஊராட்சி உதவி இயக்குநா் ஆா்.அருண் அறிவுறுத்தலின்படியும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஊராட்சி செயலரிடமே தரலாம். மேலும், மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருவதைத் தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT