திருப்பத்தூர்

புளிய மரம் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம்

17th Jun 2020 07:36 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே புளிய மரம் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

ஜோலாா்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சியில் திருப்பத்தூா்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள புளிய மரம் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் முறிந்து இரு மின் கம்பங்கள் மீது விழுந்தது. அப்போது, மின் கம்பங்களில் தீப்பொறி ஏற்பட்டது.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை மின்வாரிய இளநிலைப் பொறியாளா் கமலநாதன் தலைமையிலான பணியாளா்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, மின் கம்பிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரம் ஆனதால் சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை புதிய மின் கம்பங்கள் அமைத்த பின்னா் மின் இணைப்பு வழங்கப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT