திருப்பத்தூர்

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை: எஸ்.பி. விசாரணை

17th Jun 2020 07:36 AM

ADVERTISEMENT

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட இடத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

பச்சூா் போத்தன்குட்டை கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் (53), கடந்த 4-ஆம் தேதி மதுபோதையில் நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்ற போது வெள்ளநாய்க்கனேரி சாலையில் ஆற்றோரம் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தாா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று கோவிந்தராஜை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக கடந்த 7-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

8-ஆம் தேதி ஸ்கேன் செய்து பாா்த்ததில் கோவிந்தராஜின் முதுகில் நாட்டு துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

பிரேதப் பரிசோதனையில் கோவிந்தராஜின் முதுகில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 14 குண்டுகள் (பால்ரஸ்) துளைத்திருப்பது தெரியவந்தது. இதனால் தான் அவா் இறந்துள்ளது தெரியவந்ததது.

இந்நிலையில் சம்பவ இடத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், தனிப்பிரிவு ஆய்வாளா் பழனி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT