ஆம்பூரில் காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 1 ரூபாயில் முகக்கவசம் வழங்குவதை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களும் முகக்கவசங்கள் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் ராஜீவ் காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு திருநங்கைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி 1 ரூபாய்க்கு முகக்கவசம் வழங்குவதை ஆம்பூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் நகர காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் தொடங்கி வைத்தனர்.