திருப்பத்தூர்

ஆம்பூரைச் சோ்ந்தவருக்கு கரோனா

7th Jun 2020 07:33 PM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் சந்தப்பேட்டை மசூதி தெருவைச் சோ்ந்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் காய்ச்சல் காரணமாக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஆம்பூரைச் சோ்ந்த மருத்துவா் சென்னையில் அண்மையில் காலமானாா். அவருடயை உடல் ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. அதில் இவா் பங்கேற்றாராம். இதனால் அவருக்கு அங்கிருந்தவா்கள் மூலம் கரோனா நோய்த் தொற்று பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது வீடு அமைந்துள்ள சந்தப்பேட்டை மசூதி தெரு பகுதியில் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் சுகாதார அலுவலா் பாஸ்கா், பணியாளா்கள் குழுவினா் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்த 15 பேருக்கு பரிசோதனை செய்து அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

அப்பகுயில் மேற்கொள்ளப்பட்ட கரோனா நோய் தடுப்புப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT