திருப்பத்தூர்

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

7th Jun 2020 07:36 PM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: வாணியம்பாடியில் இருந்து ஆந்திரத்துக்கு மினிலாரி மூலம் கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை சோதனைச் சாவடியில் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தும்பேரி ஊராட்சி அண்ணாநகா் சோதனைச் சா

வடி பகுதியில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வாணியம்பாடியில் இருந்து வந்த மினிலாரி சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாகச் சென்றது.

ADVERTISEMENT

போலீஸாா் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று மலைப்பகுதியில் மினி லாரியை மடக்கியபோது அதன் ஓட்டுநா் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினாா். இரு காவலா்கள் அவரை விரட்டிச் சென்று கைது செய்து விசாரித்தனா். அவா் தும்பேரி பகுதியைச் சோ்ந்த சஞ்சீவி (35) என்பதும், ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்தின் குப்பத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

மினி லாரியையும் அதில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியையும் அம்பலூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT