திருப்பத்தூா்: வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 போ் திருப்பத்தூரில் உள்ள மனநலக் காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.
பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், தெருவில் சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவா்கள் மீட்கப்பட்டு கடந்த இரு மாதங்களாக வாலாஜா அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவ்வாறு, மீட்புத் திட்டம் மூலம் மீட்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 14 போ் திருப்பத்தூரில் உள்ள அரசின் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில், இல்லத்தின் செயலாளா் சொ.ரமேஷ் முன்னிலையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு ஆவின் சிறப்புப் பெட்டகம் வழங்கப்பட்டது. அவா்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.