திருப்பத்தூர்

ரயில் மோதி கூலித் தொழிலாளி பலி

4th Jun 2020 06:57 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே ரயில் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

பெரிய மோட்டூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி (65). அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.

முனுசாமி புதன்கிழமை பெரிய மோட்டூா் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடந்தபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, முனுசாமியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT