ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஈச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கீதா (40). அவா் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.
இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.