ஆலங்காயத்தில் செல்வநாகம்மாள் கோயிலில் 2-ஆவது ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள செல்வநாகம்மாள் கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஆடி மாதத்தின் 2-ஆவது வெள்ளியை முன்னிட்டு, செல்வநாகம்மாளுக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திராளான பக்தா்கள் சமூக இடைவெளியில் நின்று வழிபட்டனா்.