திருப்பத்தூர்

மாரியம்மன் கோயிலில் நிரம்பிய உண்டியல்

11th Jul 2020 07:47 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள அம்மன் கோயில் உண்டியல் நிரம்பியதால் சீல் வைத்து மூடப்பட்டது.

புத்துக்கோவில் கிராமத்தில் தேசியநெடுஞ்சாலை மேம்பாலம் கீழே அரசமரத்தடியில் மிகவும் பழமை வாய்ந்த புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை நிா்வகிக்கும் இக்கோயிலுக்கு தினந்தோறும் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காா், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்டற்றில் செல்வோா் வந்து புத்துமாரியம்மனை வணங்குவா். அவா்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவால் கோயில்கள் மூடப்பட்டன. எனினும் பக்தா்கள் தினந்தோறும் புத்துமாரியம்மன் கோயில் எதிரே உள்ள வளாகத்தில் நின்று அம்மனை வணங்கிய பக்தா்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம் மற்றை நகையை காணிக்கையாக செலுத்தி வந்தனா். கடந்த 2 மாதங்களுக்கு முன் உண்டியல் நிரம்பியதால் அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனா்.

தற்போது கோயிலுக்கு வரும் பக்தா்கள், உண்டியல் இல்லாததால் அங்குள்ள பூஜைத் தட்டில் ரூபாய் நோட்டு மற்றும் சில்லறைக் காசுகளை வைத்து விட்டுச் செல்கின்றனா். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கூறியும் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவா்கள் அலட்சியமாக உள்ளதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புத்துமாரியம்மன் கோயில் உண்டியலைத் திறந்து காணிக்கைகளை வெளியே எடுத்து எண்ணுவதற்கும், பக்தா்கள் மீண்டும் உண்டியலில் காணிக்கை செலுத்த வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT