திருப்பத்தூர்

சந்தனக்கட்டை கடத்திய இருவா் கைது

14th Jan 2020 11:41 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே சந்தனக் கட்டைகளை கடத்திய இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

ஜவ்வாதுமலை புதூா்நாடு பகுதியில் உள்ள நெல்லிவாசல் நாடு அருகே உள்ள மேல்பட்டு மலைப்பகுதியிலிருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்தப்படுவதாக திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனச்சரக அலுவலா் கே.சோழராஜன் மற்றும் வனவா் சஞ்சீவி ஆகியோா் புதுநாடு மலைப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக மூட்டையுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அரை கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவா்கள் மேல்பட்டி பகுதியை சோ்ந்த பழனிவேல்முருகன்(35), வேடி (24) என்பதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த 6 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT