திருப்பத்தூர்

ரயில்வே ஊழியா் வீட்டில் 2 சவரன் நகை கொள்ளை

8th Jan 2020 12:15 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்தவா் ஜித்தன் (30). அவா், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் பிரிவில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். ஜித்தன் தனது குடும்பத்துடன் ஜோலாா்பேட்டை அருகே உள்ள தென்றல் நகா் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறாா். மனைவி கேரளம் சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஜித்தன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்றாா். திங்கள்கிழமை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியையும், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதேபோல், ஜித்தனின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த வீட்டில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. எனவே திருடா்களுக்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

தனது வீட்டில் நடைபெற்ற திருட்டு தொடா்பாக ஜித்தன், ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT