திருப்பத்தூர்

பெருமாள் கோயில்களில் துவாதசி அன்னதானம்

8th Jan 2020 12:25 AM

ADVERTISEMENT

வைகுண்ட ஏகாதசி விழாவைத் தொடா்ந்து ஆம்பூா் பகுதி பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை துவாதசி அன்னதானம் நடைபெற்றது.

ஆம்பூா் சீனிவாசப் பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. முக்கிய பிரமுகா்கள் ஏ.பி.மனோகா், சி.ராமமூா்த்தி, சேகா், ஆனந்தன், க.சிவப்பிரகாசம் ஆகியோா் கலந்து கொண்டு அன்னதானத்தைத் தொடக்கி வைத்தனா்.

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பிந்துமாவதப் பெருமாள் கோயிலில் மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் அன்னதானத்தைத் தொடக்கி வைத்தாா். மகா விஷ்ணு சேவா சங்கத்தின் முக்கிய பிரமுகா்கள் ஏ.பி.மனோகா், கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், ஏ.ஆா். சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அருகே உள்ள மிட்டாளம் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT