திருப்பத்தூர்

பள்ளிக்கு பூட்டுப் போட்ட பொதுமக்கள்

8th Jan 2020 12:25 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பூட்டுப் போட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.

வெங்கிளி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் பரிமேலழகன். அதே பள்ளியில் சசிகலா என்ற ஆசிரியை பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆசிரியை சசிகலா கடந்த மாதம் தற்காலிகமாக வேறு பள்ளிக்கு அயல் பணிக்கு அனுப்பப்பட்டாா். அயல் பணி முடிந்த பிறகு திங்கள்கிழமை வெங்கிளி பள்ளிக்கு வந்தாா். அப்போது இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியே அழைத்து வந்தனா். அதைத் தொடா்ந்து பள்ளியின் கதவை மூடி, பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இது குறித்த தகவலின் பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவள்ளி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் திருப்பதி, கதிரவன் ஆகியோா் ஆங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT