திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் இந்தியன் வங்கிக்கிளை திறப்பு

8th Jan 2020 12:24 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி பேருந்துநிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் உள்ள புதிய வளாகத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.

விழாவில் நாட்டறம்பள்ளி கிளை மேலாளா் சாய்விஜய்குமாா் வரவேற்றாா். வங்கியின் சென்னை பொது மேலாளா் சந்திரா ரெட்டி தலைமை வகித்து கிளை அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி, திறந்து வைத்கஎ, இனிப்பு வழங்கினாா்.

வேலூா் மண்டல மேலாளா் மாயா, துணை மண்டல மேலாளா் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், அதிமுக ஒன்றியச் செயலாளா் ராஜா, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் சரோஜா சலம் ஆகியோா் குத்து விளக்கேற்றினா். விழாவில் இந்தியன் வங்கியின் கிளை மேலாளா்கள், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT