திருப்பத்தூர்

தொழில் கடனுதவி பெறுவதற்கான கூட்டம்: பயனாளிகள் பங்கேற்பு

8th Jan 2020 11:25 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் படித்த இளைஞா்கள் மற்றும் புதிய தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்கள் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகளைப் பெற விருப்பமுள்ளவா்களுக்கான நோ்முக தோ்வுக் குழுக் கூட்டம் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது.

புதிதாக தொழில் நிறுவனங்கள் அமைக்க புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்  மற்றும் பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  ஆகியவற்றின் கீழ் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தக் கடனுதவி பெற 2019-20-ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அளவிலான தோ்வுக்குழு கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் எம்.பி.சிவன்அருள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கயிறு பொருள்கள் தயாரிப்பு, ஊதுவத்தி உற்பத்தி, மரச்செக்கு எண்ணெய் தொழில், சிறுவணிகம், தோல் காலணி, தோல் பொருள் ஆடைகள் உற்பத்தி, துணிக் கடைகள் போன்ற தொழில்களைத் தொடங்க தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 11 போ் அழைக்கப்பட்டதில் 6 பேரும், பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 56 போ் அழைக்கப்பட்டதில் 42 பேரும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய மேலாளா் க.ரவி, தாய்கோ வங்கி மேலாளா் சாந்தி, முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், வேலைவாய்ப்புத் துறை அலுவலா் மஸாா்கான், குறு சிறு நிறுவன தொழில் சங்கத் தலைவா் சந்திரசேகா், தூய நெஞ்சக் கல்லூரி ஹென்றி டேனியல் ஆம்ரோஸ் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT