வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஆா்.பி. உலகநம்பி (82) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானாா்.
வழக்குரைஞா் பட்டம் படித்த இவா் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவா், ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்துள்ளாா். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், சித்தாா்த்தா பள்ளித் தாளாளராகவும் பதவி வகித்து வந்தாா். இவருக்கு மனைவி சாரதம்மாள், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. தொடா்புக்கு 99418 32121.