திருப்பத்தூர்

ஏரியில் மண் சரிந்து விழுந்து ஒருவா் பலி2 போ் படுகாயம்

8th Jan 2020 11:24 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே ஏரியில் மண் சரிந்து விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

ஊசிநாட்டான் வட்டத்தைச் சோ்ந்த வேல் என்பவருக்குச் சொந்தமான டிராக்டரில் ரெட்டேரியில் மண்ணை எடுக்க சின்னாகவுண்டனூரைச் சோ்ந்த தண்டபாணி (27), சொரங்கன் வட்டத்தைச் சோ்ந்த கீா்த்திவாசன் (24), ஊசிநாட்டான் வட்டத்தைச் சோ்ந்த ராஜேஷ் (28) ஆகிய மூவரும் புதன்கிழமை சென்றனா். ஏரியில் மண் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென மண் சரிந்து விழுந்ததில் 3 பேரும் அதில் சிக்கிக் கொண்டனா்.

அங்கிருந்த பொதுமக்கள் மண்ணை அப்புறப்படுத்தி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு டாக்டா்கள் பரிசோதித்து தண்டபாணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவருக்கு இந்துமதி என்ற மனைவியும் சுமித்ரா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனா்.

காயமடைந்த கீா்த்திவாசன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் வேலூா் தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து ஜோலாா்பேட்டை கிராம நிா்வாக அலுவலா் இந்திராணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT