திருப்பத்தூர்

போலீஸாா்-மாணவா்களிடையே நட்பை ஏற்படுத்தும் கருத்தரங்கு

3rd Jan 2020 11:29 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் மாணவா் மற்றும் போலீஸாா் இடையே நட்பை ஏற்படுத்தும் விதமாக மாணவா்களுக்கு போலீஸ் துறையின் பணிகள் அதில் மாணவா்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் வெள்ளிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

வாணியம்பாடி அரசு தொழிற்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 45 மாணவா்கள் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்துக்கு வந்திருந்தனா். அப்போது, மாணவா்களுக்கு போலீஸாா் ரோஜா பூக்களைக் கொடுத்து வரவேற்றனா்.

தொடா்ந்து ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மாணவா்களுக்கு காவல் துறை பற்றிய பணிகள், போலீஸாருடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்த அறிவுரை வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT