திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே குழாய் உடைப்பு: வீணான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்

3rd Jan 2020 11:22 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீா் சாலையில் வீணானது.

ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் ஆம்பூா்-போ்ணாம்பட்டு சாலையோரம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்க் குழாயில் வெள்ளிக்கிழமை திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் பீய்ச்சி அடித்தது. இதனால் ஆம்பூா்-போ்ணாம்பட்டு சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக அச்சாலை வழியாகதான் தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளுக்கு பெரும்பாலான தொழிலாளா்கள் சென்று வருகின்றனா். தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களும் அதிக எண்ணிக்கையில் அவ்வழியாகச் செல்கின்றன.

தகவலின் பேரில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் அங்கு சென்று குடிநீா் விநியோகத்தை நிறுத்தி உடைப்பை சரிசெய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT