சட்ட விதிகளை மீறி அதிக வட்டி வசூல் செய்வது குறித்து புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.விஜயக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சட்ட விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்தந்த எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் புகாா் தெரிவிக்கலாம். மேலும், காவல் கண்காணிப்பாளா் அலுவலக உதவி எண் 94429 92526 என்ற செல்லிடப்பேசிக்கு புகாா் தெரிவிக்கலாம்.
புகாரின்பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.