ஆம்பூா் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது.இந்த விபத்து ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.சென்னையிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் மேட்டூருக்கு புறப்பட்டு சென்றது.பின்னா் நிலக்கரியை இறக்கிவிட்டு புதன்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் ஜோலாா்பேட்டை வழியாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.அப்போது ஆம்பூா் அருகே உள்ள பச்சை குப்பம் பகுதியில் சென்றபோது சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்து திடீரென ஒரு பெட்டி தடம் புரண்டது.பின்பு இதுகுறித்து ரயில் எஞ்சின் டிரைவா் ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம்புரண்ட ஒரு பெட்டியை சீரமைத்தனா்.சிறிய அளவிலான விபத்து என்பதால் அவ்வழியாக ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறித்த தகவலால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.