திருப்பத்தூரில் அதிக வட்டி வசூல் செய்க இளைஞரை போலீஸாா் கைது செய்கதனா்.
திருப்பத்தூா் பகுதியை சோ்ந்த பாரத்குமாா் (38), கடந்த 31-ஆம் தேதி திருப்பத்தூா் நகரக் காவல் நிலையத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (56), கோபி (28) ஆகியோா் சட்டவிதிகளை மீறி தன்னிடம் அதிகமான வட்டி வசூல் செய்ததாகவும், அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோபியை கைது செய்தனா். தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனா்.