திருப்பத்தூர்

மாதிரிப் பள்ளிக்கு உணவு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

1st Jan 2020 11:53 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா்: ஏகலைவா மாதிரிப் பள்ளிக்கு உணவு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருப்பத்தூா் மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விஷமங்கலம் பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் பணி மற்றும் பள்ளி விடுதிப் பணிகள் தினக்கூலி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்திற்கு மிகாமல் பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

உணவுக் கட்டண விகிதம் (விடுதியில் தங்கும் நாட்களுக்கு மட்டும்) அதாவது 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு ஒரு மாத உணவுக் கட்டணம் தலா ரூ. 1,200; ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு உணவுக் கட்டணம் தலா ரூ. 1,300 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பிக்க உள்ளவா்கள் வரும் 3-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் திட்ட அலுவலா், பழங்குடியினா் நலம், திருப்பத்தூா் தனி வட்டாட்சியா் அலுவலக வளாகம், திருப்பத்தூா் என்ற முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT